Wednesday, September 25, 2013

குழந்தை மிதித்த கோலம்

அவளைப் பார்த்தேன் - அகரம் மறந்தேன்
அவள் குரல் சேர்ந்தேன் - அது பனை மரத்தேன் 

காற்குழலோள்  சலங்கை ஒலி 
போர்வாளின் வலக்கை ஒலி 

குடை பழகிய அவள் 
நடை பழகிய  நிழல் 



குழந்தை மிதித்த கோலம் - அவள் 
நிலாப்பெண் நிமித்த வெட்கம்

பெருமை சேர்க்கும் பெண்மை - அவள் 
கருமை வார்க்கும் கண்மை

உளறல் கூட உருவகமே - இங்கு 
கிறுக்கல் கூட கவிதையே!


Tuesday, November 13, 2012

பாட்டிலுக்குள் ஒரு தீபாவளி!


















மல்லையாவே...

உன் கம்பெனி பாட்டில் கூட தீபாவளி கொண்டாடுகிறது

- என் நண்பர்களின் ராக்கெட் லாஞ்ச பேடாக!

என்ன தவறு செய்தார்கள் உன் ஊழியர்கள்?

Friday, August 17, 2012

நீ


குழந்தை
கிறுக்கிய கிறுக்கல் நீ

சிறுவன்
அடித்த அரை பெடல் நீ

கார்முகில்
கண்ட கருமை நீ

கன்னிப்
பெண்ணின் கண்மை நீ












நண்பன்
நவின்ற நன்றி நீ

முதியோர்
முகத்தின் சுருக்கம் நீ

காதல்
தீட்டிய கடிதம்  நீ

பெயரிட முடியாக் கவிதை நீ!

Saturday, June 16, 2012

வானவில்












மகிழ்ச்சி மழையில்
வானம் கொண்டாடும் ஹோலிப் பண்டிகை!

ப்ளாக் அண்ட் ஒயிட் கண்களால்
மழைப்பெண் கண்ட கலர்  கனவு!

மழை உண்ட மகிழ்வில்
மேகம் போட்ட வெற்றிலைப்பாக்கு!

வானக் கல்லூரியில் விண்மீன்
விட்டுச்சென்ற வண்ண ஆட்டோகிராப்!

பூமியின் காதலுக்கு வானம் காட்டிய
பஞ்சவர்ண பச்சைக்கொடி!

நிலமகள் சீதைக்கு வான ராமன்
வளைத்த வண்ண வில்!


Saturday, June 9, 2012

பசலை











பனியுரு காலையில்
விண்மீன் சாலையில்
சிறுபிள்ளை தேடலில்
உறுபசி கூடலில்

பார்த்தேனே உன் கண்மையை
கோர்த்தேனே நம் இரு மெய்யை
பிறிந்தேனே என் இனிமையை
அறிந்தேனே - உன் இன்மையை

இதயம் நையப்பட்டது
கனவு கொய்யப்பட்டது
நெய்தல் நெய்யப்பட்டது
பசலை செய்யப்பட்டது!


Thursday, February 16, 2012

இலக்கணக் காதல்














என் காதலின் உவமை நீ.
உன் காதலின் உவமேயம் நான்.
வாழ்வதே நம் காதலின் உருவகம்.
நீ இல்லாத நான் ஒரு பொருள் எச்சம்!
காதலின் தொல்காப்பியமே..
என்னோடு கலந்து காதலின் ஆகுபெயர் ஆகிவிட வா..

Wednesday, January 25, 2012

திமிர்

அடங்கிப் போதலின் பாலிஷ் செய்யப்பட்ட வெர்படிம் - பணிவு!